truetamilnews.com

சென்னை: சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த சட்டமுன்வடிவில் கூறியிருப்பதாவது: 
கோவிட் 19ன் பேரிடர் திடீரென ஏற்பட்டதன் காரணமாக மாநிலத்தின் வருவாய் திரட்டுதலில் கடுமையான குறைப்பு மற்றும் செலவின பெருக்கத்தின் விளைவாக 2020-21ம் ஆண்டில் மாநிலத்தின் செலவின பொறுப்புகளுக்கு நிதி வழங்குவதற்காக மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டின் 2 விழுக்காடு வரை கூடுதல் கடன்களின் கட்டுபட்ட மற்றும் கட்டுப்படாத பகுதிக்கு நாடுவதற்கு முன்பு மாநில அரசுகள் மாநில நிதிநிலை நிர்வாகத்தில் பொறுப்புடைமை மற்றும் வரவு செலவு திட்ட மேலாண்மை சட்டத்தினை திருத்தம் செய்ய வேண்டுமென மத்திய அரசு ஆணையிட்டது. எனவே, நிதி நிலை பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் இலக்கை எட்டுவதற்கான காலத்தை நீட்டிப்பதற்காக கடந்த 2003ம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிர்வாகத்தில் பொறுப்புடைமை சட்டத்தை திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது.

அதன்பேரில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிநிலை பற்றாக்குறை விகிதத்தை 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி 3 விழுக்காட்டளவிற்கு மிகாதாவாறு வைத்திருந்து அதன் பின்னர் அதே நிலையில் பின்பற்றுதல் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டமசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks