truetamilnews.com

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் செயல்பட்ட கொரோனா சிறப்பு வார்டு மூடப்பட்டு உள்ளது. இதனையடுத்து, கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில், கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, கடந்த ஏப்., மாதம் கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சிறப்பு வார்டாக மாற்றப்பட்டது.’நெகட்டிவ், பாசிட்டிவ்’ என சந்தேகத்தின் அடிப்படையில் உள்ள நபர்களை சிறப்பு வார்டுகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த, ஆறு மாதங்களாக சிறப்பு வார்டாக செயல்பட்ட பள்ளியை, பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.இந்நிலையில், பள்ளியில் செயல்பட்ட கொரோனா வார்டு மூடப்பட்டு, நகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

சப் – கலெக்டர் வைத்திநாதன் கூறியதாவது:பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்ட சிறப்பு கொரோனா வார்டு மூடப்பட்டுள்ளது. அங்கு இருந்தவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, சுகாதாரத்துறையினர் கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். நகராட்சி சார்பில், மூன்று நாட்களுக்கு ஒரு முறை பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட சுகாதாரப்பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கிருமிநாசினி தெளிப்பு பணி, மூன்று முறைக்கு மேலாக மேற்கொண்டு, துாய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும். பள்ளி திறந்ததும் மாணவிகள் பாதுகாப்பாக வந்து படிக்கும் வகையில், முழு அளவில் சுகாதார பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தற்போது, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், 160; நாச்சிமுத்து பிரசவ விடுதியில், 70 படுக்கை வசதிகளும் உள்ளன. மேலும், பள்ளிக்கு மாற்றாக, ஜோதிநகரில் உள்ள திருமண மண்டபத்தில், 130 படுக்கை வசதியுடன் சிறப்பு வார்டு தயாராக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks