truetamilnews.com

அமைப்பு சாரா தொழிலார்கள் தங்கள் முதிர் வயதில் பயன்படும் வகையில் பென்சன் பெற தொடங்கப்பட்டதே பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா. மத்திய அரசின் இந்த திட்டம் 2019ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.

இந்த திட்டம் விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்கள், மீனவர்கள், கட்டுமான தொழிலாளர்கள்,ஆட்டோரிக்க்ஷா மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுனர், பனைமரத் தொழிலாளர், காலணித் தொழிலாளர், முடி திருத்துவோர், தையல் தொழிலாளர், ஓவியர், கைத்தறி நெசவு தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்,கிராமக் கோவில் பூசாரிகள், நாட்டுப்புறக் கலைஞர்கள், கட்டட தொழிலாளர்கள், புத்தகப் பதிப்பாளர், விற்பனையாளர் மற்றும் பணியாளர், அச்சக தொழிலாளர், கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள், சிறு வியாபாரிகள், வீட்டுப் பணியாளர், பொற்கொல்லர், திரைத் தொழிலாளர் போன்றவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

இந்த திட்டத்தில் இணைபவர்களின் வருமானம் 15,000 கீழ் இருக்க வேண்டும். வருமான வரி செலுத்தாதவர்களாக இருக்க வேண்டும். ஊழியர்களின் தேசிய ஓய்வூதிய திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி போன்ற திட்டங்களில் சேர்ந்திருக்க கூடாது. வயது வரம்பு 18 – 40 மட்டுமே இருக்க வேண்டும்.

இது 50:50 என்ற அடிப்படையில் குறிப்பிட்ட தொகையை பங்குதாரரும் பாதி தொகையை அரசும் செலுத்தும். 

இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்தவர்களின் வயது 60 நிறைவடைந்த பிறகு மாதம் ரூ.3000 வரை பென்ஷனாக வழங்கப்படும். ஒரு வேலை சந்தாதாரர் இறந்து விட்டால் அவரின் துணைக்கு இந்த உதவித்தொகை கிடைக்கும்.

இந்த திட்டத்தில் சேர விருப்பம் உள்ளவர்கள் அருகில் உள்ள காமன் சர்வீஸ் சென்டருக்கு சென்று விண்ணப்பிக்கலாம். இதில் இணைய ஜன் தன் வங்கி கணக்கும் ஆதார் அட்டையும் அவசியம். நீங்கள் இந்த திட்டத்தில் இருந்து பாதியில் விலகினால் அரசின் பங்கு கிடைக்காது. ஒரு வேலை பத்து வருடங்களுக்குள் விலகினால் நீங்கள் சேமித்த தொகையோடு வங்கி வைப்பு வட்டி மட்டுமே கிடைக்கும். ஒரு வேலை 10 வருடங்களுக்கு பிறகு விலகினால் எதுவரை நீங்கள் பணம் செலுத்தியுல்லீர்களோ அதற்கான தொகை வட்டியுடன் கிடைக்கும். இதிலும் அரசின் பங்கு கிடைக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks