truetamilnews.com

சென்னை: சென்னை பாண்டிபஜாரில் அரசுக்கு சொந்தமான சிந்தாமணி கூட்டுறவு பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, அதிக கொள்ளளவு கொண்ட டேங்க் மாற்றும் பணி கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது. இதில், ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்த சேகர் (36), திருவான்மியூரை சேர்ந்த குமார் (45) உள்பட 3 பேர் ஈடுபட்டு வந்தனர். எரிபொருள் டேங்க் மாற்றும் பணி நேற்று இறுதிக்கட்டத்தில் இருந்தது. அப்போது பழைய பெட்ரோல் சேமிப்பு டேங்கில் பெட்ரோல் இருந்ததாக கூறப்படுகிறது. 

ஊழியர்கள் குமார், சேகர் ஆகியோர் சேமிப்பு டேங்கில் உள்ள இணைப்பு குழாயை துண்டிக்க வெல்டிங் செய்துள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக தீப்பொறி டேங்கில் இருந்த பெட்ரோலில் விழுந்ததால், டேங்க் தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெளியேறியது.

அப்போது பணியில் ஈடுபட்டிருந்த குமார் மற்றும் சேகர் ஆகியோர் உடல் முழுவதும் தீ பரவியது. இருவரும் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தனர். சக ஊழியர்கள் பயத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து அதிநவீன மீட்பு வாகனத்தில் விரைந்து வந்த தி.நகர் தீயணைப்பு வீரர்கள், ரசாயன பொடியை தூவி தீயை கட்டுப்படுத்தினர். மேலும், அருகில் உள்ள சேமிப்பு டேங்கில் தீ பரவாமலும் தடுத்தனர். இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks