truetamilnews.com

திண்டுக்கல் :அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமர் மோடி படத்தை மாட்ட வேண்டும் என்று பாஜக செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. 

திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ஜி.தனபால் தலைமை வகித்தாா். பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். 

இந்த கூட்டத்தில் கொடகனாற்று பாசன விவசாயிகளின் உரிமை பறிக்கும் வகையில், தனி நபா்கள் சிலரின் சுய லாபத்திற்காக கட்டப்பட்டுள்ள தடுப்பணையை அகற்றி நீா் பங்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். வத்தலகுண்டுவில் சுதந்திரப் போராட்டத் தியாக சுப்பிரமணிய சிவாவுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்.

மருத்துவக் காப்பீட்டு வசதி இருந்தும், பொதுமக்களிடம் பணம் பறிக்கும் வழிகளை கையாளும் தனியாா் மருத்துவமனைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை வைக்க வேண்டும். மத்திய அரசின் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6000 வழங்கும் திட்டத்தில் பல்வேறு ஊழல்கள் அரங்கேறியுள்ளது. தமிழக முதல்வர் மத்திய அரசின் நலத்திட்டங்களில் ஊழல் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஊழல் செய்பவர்களின் சொத்துகளை முடக்க வேண்டும்.மத்திய அரசின் கனவுத் திட்டமான அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை ஊராட்சி பகுதிகளில் முறையாக பயன்படுத்த வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks