truetamilnews.com

கிருஷ்ணகிரி மாவட்டம் மாதைப்பள்ளியை சேர்ந்தவர் ஜெர்விஷ் டோனி இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் தன்னுடன் படிக்கும் சென்னை ராயபுரத்தை சேர்ந்த டெல்லி பாபு மகன் யுவராஜ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு இருவரும் மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர்.நேற்று அதிகாலை ஒரு மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரை கடந்து நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென நாய் ஒன்று ரோட்டின் குறுக்கே வந்துள்ளது.இதில், நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் ஜெர்விஷ் டோனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

யுவராஜ் படுகாயம் அடைந்தார் .தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயமடைந்த யுவராஜை மீட்டு, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks