truetamilnews.com

நீட் தேர்வு அச்சத்தால் மரணமடைந்த மாணவர்களுக்கு பிஜேபி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது சட்டத்திற்கு உட்பட்ட கருத்து அல்ல என தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வு அச்சம் காரணமாக நேற்று ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய பேசுபொருளாக அமைந்தது. ஏற்கனவே, பல அரசியல் தலைவர்கள் நீட் தேர்வு ரத்து செய்யப்படவேண்டும் என்று குரல் கொடுத்துவந்த நிலையில், நேற்று நீட் எதிர்ப்புக்குரல் அதிகமாக இருந்தது.

திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டிருந்த டிவிட்டர் பதிவில், “நீட்தேர்வு அச்சம் காரணமாக யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். இன்னும் 8 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். வாய்ப்பை இழந்தவர்களுக்கு பொதுத்தேர்வு அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு உருவாக்கப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதனை அடுத்து, இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை, “நீட் தேர்வு அச்சத்தால் மரணமடைந்த மாணவர்களுக்கு பிஜேபி மற்றும் என்னுடைய சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். நான் நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். குழந்தைகள் கொஞ்சம் தைரியமாக இருக்கவேண்டும். அதுவும் இந்த கரோனா காலத்தில் அவர்கள் இன்னும் தைரியமாக இருக்க வேண்டும்.

8 மாதத்தில் நீட் தேர்வு ரத்தாகும் என ஸ்டாலின் கூறுவது தவறான தகவல். நீட் தேர்வு உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்பதால் நீதிமன்ற அவமதிப்பாகும். கல்வி வணிகமாக மாறியதை உடைக்கவே கல்விக்கொள்கை கொண்டுவரப்பட்டது.” என்று பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks