truetamilnews.com

மும்பை: கோவாக்சின் தடுப்பூசியை விலங்குகளுக்கு செலுத்தி பார்த்ததில் நல்ல விளைவுகள் கிடைத்திருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.இந்நிறுவனமும் ஐ.எம்.சி.ஆர்., எனப்படும் இந்திய மருத்து கவுன்சிலும் இணைந்து கொரோன தடுப்பூசி மருந்தாக கோவாக்சினை தயாரித்துள்ளன.

இம்மருந்து நாடு முழுவதும் 12 பரிசோதனை மையங்களில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் 20 செம்முகக் குரங்குகளை பயன்படுத்தி பரிசோதனை நடத்தப்பட்டது. 20 குரங்குகளும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அனைத்து குரங்குளிடமும் நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் தடுப்பூசியானது கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இரண்டாவது கட்ட தடுப்பூசி பரிசோதனைக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks