truetamilnews.com

ஆடம்பர கார்களை வாங்கி குவிப்பத்தில் புரூணே சுல்தானுக்கு நிகர் யாருமில்லை. எண்ணெய் வளமிக்க நாடான புரூணே 1967இல் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. அதன் சுல்தான் அதாவது அந்த நாட்டின் மன்னர் ஹசனன் போக்கியா முகாசுதீன் வாதுல்லா இருக்கிறார். 

எண்ணெய் வளமிக்க நாட்டின் மன்னரான முகாசுதின் வாதுல்லாவின் வருமானத்திற்கு அளவே கிடையாது.  ஒரு வினாடிக்கு அவரது வருமானம் 5277 ரூபாய்.  அதாவது வாரத்திற்கு 3191 கோடி ரூபாய் ஆகும்.  


சுல்தானின் அரண்மனை 


இவரது அரண்மனை 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.   இங்கு 1788 அறைகள் உள்ளன.   இந்த அரண்மனைதான் உலகில் மிகப் பெரிய அளவிலான அரண்மனை.  இந்த அரண்மனையில் 275 ஆடம்பர குளியலறைகள் உள்ளன. இதில் உள்ள பொருட்கள் அனைத்தும் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்டவை.   
பிறந்தநாள் பரிசு விமானமா 


இவர் தனது மகளின் 18 வது பிறந்த நாளுக்கு ஏர் பஸ் A320 (AIR BUS A320) விமானம் வழங்கினார். இவர் பயன்படுத்துவது போயிங் 747 விமானம் ஆகும். 

ஆடம்பர கார்களின் பேராசை


இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் பல விதமான ஆடம்பர கார்களை வாங்கி குவிப்பத்தில் புரூணே சுல்தானுக்கு பேராசையாக இருக்கிறது. அவருடைய  அரண்மனையில் தற்போது சுமார் 7000 கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இவற்றின் மதிப்பு 2312 கோடி ரூபாய் ஆகும்.

ரோல்ஸ் ராய்ஸ்(Rolls Royce)கார்களின் எண்ணிக்கை 


அவற்றில் அதிகமாக இருப்பவை ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce)  கார்கள் மட்டும்தான். அவற்றின் எண்ணிக்கை மட்டும் 604 ஆகும்.

 மற்ற ஆடம்பர கார்களின் எண்ணிக்கை 


கீழ்வருபவை மற்ற கார்களின் எண்ணிக்கை ஆகும்
பென்ஸ்(Benz)-574

ஃபெர்ராரி(Ferrari)-452

பீட்லி(Beetle)-382

பி.எம்.டபள்யூ(BMW)-209

ஜாக்குவார்(Jaguar)-179
ஆகியவை குறிப்பிடத்தக்க பிரபலமான கார்கள் ஆகும்.

இன்னும் பல

இது மட்டுமில்லாமல் 4000 வெவ்வேறு நீறுவனங்களின் ஆடம்பரக் கார்கள் இவருக்கு சொந்தமானது ஆகும். 


கார்களின் பராமறிப்பு


இத்தனை கார்களையும் தனது விமான நிலையத்தில் ஒரு மூலையில் நிறுத்தி வைத்துள்ளார். அந்த கார்கள் நிறுத்தும் பகுதிகளுக்கு அந்தந்த கார்களின் நிறுவனங்களின் பெயர்களையே வைத்துள்ளார்.   அந்த கார்களை பராமரிக்க தனித்தனியாக மெக்கானிக் வேலையாட்களை வைத்துள்ளார். அவர்களுக்கு உணவு, உடை, தங்குவதற்கு இடம் கைக்குள் அடங்காத அளவிற்கு சம்பளம் என அனைத்தும் வழங்கி வருகிறார்.   அதில் குறிப்பிட்ட கார் மெக்கானிக்குகளுக்கு ஆண்டுக்கு 1 கோடியே 15 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கி வருகிறார். 

உலகின் மிக முக்கிய ஆடம்பர கார்கள் அனைத்தும் இவரிடம் உள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. அவற்றுள் சில கார்கள் அவரது விருப்பத்திற்கு ஏற்ப அந்த கார் நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டது என்பது இன்னும் குறிப்பிடத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks