truetamilnews.com

கோவை:கோவை, சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர்., ரோட்டில் உள்ள பஸ் ஸ்டாப் மேற்கூரை தகரம், காற்றின் வேகத்துக்கு பிய்ந்துள்ளது; ரோட்டில் செல்வோர் மீது விழுந்து, உயிர் பலி ஏற்படுத்துவதற்கு முன், சீரமைக்க வேண்டும்.கோவை நகரில், 300க்கும் மேற்பட்ட இடங்களில், பஸ் ஸ்டாப்புகள் உள்ளன. பயணிகள் காத்திருப்பதற்கு அமைக்கப்படும் நிழற்குடைகளில், தனியார் நிறுவனங்கள் விளம்பரம் செய்து கொள்ள, மாநகராட்சி அனுமதி அளித்திருக்கிறது.குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின், விளம்பரங்கள் மாற்றப்படுகின்றன. ஆனால், பயணிகளுக்கு பாதுகாப்பான நிழற்குடையாக அமைப்பதில் கவனம் செலுத்துவதில்லை; மாநகராட்சி அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.

சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர்.,ரோடு, வெங்கிட்டாபுரம் பஸ் ஸ்டாப்பில் உள்ள நிழற்குடையில், மேற்கூரை பிய்ந்து, காற்றின் வேகத்துக்கு பறக்கிறது. காற்று பலமாக வீசும்போது, தகரம் பிய்ந்து பறந்தால், ரோட்டில் செல்வோர் மீது விழுவது, உடலை கிழித்து, உயிர் பலியை ஏற்படுத்தி விடும்.இதேபோல், அவிநாசி ரோட்டில் நவ இந்தியா ஸ்டாப் அருகே, ஹாலோ பிளாக் செங்கற்களால் புதிதாக நிழற்குடை கட்டி, தனியார் நிறுவன விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்வதற்கு பதிலாக, விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, நிழற்குடைகள் அமைப்பது, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks