பொள்ளாச்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் பணிபுரிபவர்களுக்கு அவர்களின் பணியை நிரந்தரமாக்கவும் மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த காரணமாக அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இதன் காரணமாக இன்று பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணியை நிரந்தரமாக்கவும், கொரோனா தொற்றால் உயிரிழக்கும் ஊழியர்களுக்கு ரூ50 லட்சம் நிவாரணம் வழங்கவும் மற்றும் கேரளாவில் உள்ள மதுக்கடை நிர்வாக முறையை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கோரியும்  டாஸ்மாக் ஊழியர்கள் கையில் பதாதைகளை கொண்டவாரு முழக்கங்கள் எழுப்பினர்.

இது போல பொள்ளாச்சியில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks