truetamilnews

இனி வங்கி சேவைகள் பெற வங்கி கிளைகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே வங்கி சேவை வழங்கும் புதிய திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம், பொதுத்துறை வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய வங்கி சேவைகளை வீட்டிலேயே வழங்கும் என்றும் அதற்காக வங்கிகள் ஒரு சிறிய கட்டணத்தை விதிக்கும் என தெரிகிறது. இதன் மூலம், மூத்த வயதினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அதிகம் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய டோர்ஸ்டெப் சேவையின் கீழ், தற்போதைக்கு காசோலை மற்றும் வரைவோலைகள் மட்டுமே வீட்டிலேயே வந்து பிக்அப் செய்துகொள்ளப்படுவதாகவும் வரும் அக்டோபர் முதல் பெரும்பாலான நிதிசேவைகளை வீட்டிலேயே பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.முத்துக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks