truetamilnews.com

மிகவும் அரிதான வெள்ளை நிற காட்டெருமை கன்று குட்டி அமெரிக்காவில் பிறந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

அமெரிக்காவின் மொண்டானா பகுதியில் உள்ள பிட்டர் ரூட் வேலி பைசன் என்ற பகுதியில் மிகவும் அரிதான வெள்ளை நிற எருமைக் கன்று குட்டி பிறந்துள்ளது. அந்த கன்றுக்கு White Buffalo Maiden என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு கோடியில் ஒரு கன்று இதுபோன்று வெள்ளை நிறத்தில் பிறக்கும் என்று அறிவியல் வல்லுநர்கள் கூறிய நிலையில், அப்பகுதியில் உள்ள மக்கள் அந்த கன்று குட்டியை மிகவும் பத்திரமாக கவனித்துவருகின்றனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள மக்கள் இந்த வெள்ளைக் கன்றுக்குட்டியின் வரவை அதிர்ஷ்டமாக பார்க்கின்றனர்.

இன்னும் சிலரோ, இதுபோன்று வெள்ளை நிற கன்று பிறப்பது பெண்கள் முன்னேற்றத்திற்கு மிகவும் சிறந்தது எனவும் தெரிவித்துவருகின்றனர்.

மிகவும் அரிதான இந்த வெள்ளை நிற எருமை கன்றின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. அப்பகுதியில் உள்ள எருமை பாதுகாப்பு சங்கத்தின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஒரு கோடி பிறப்புகளிலும் ஒரு வெள்ளை எருமை கன்று பிறக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“காட்டெருமை இனப்பெருக்கம் செய்யத் தொடங்கியதிலிருந்து, கடந்த 20 ஆண்டுகளில் பல வெள்ளை கன்றுகள் பிறந்துள்ளன. வெண்மை என்பது ஒரு மந்தமான மரபணு” என வனவிலங்கு உயிரியலாளர் கிரேக் நோல்ஸ் தெரிவித்துள்ளார். எனினும் இந்த வெண்மை நிறம் 2 அல்லது 3 ஆண்டுகளில் மறைந்துவிடும் எனவும் வளர வளர அந்த கன்றுக் குட்டி இயல்பான நிறத்தை அடைந்துவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks