truetamilnews.com

சின்னத்திரையின் பிரபல காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் காலமானார். பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமான வடிவேல் பாலாஜி என்ற நடிகர் மக்கள் மனதில் மிகவும் பிரபலமானவர். இவர் நடிகர் வடிவேலுவை போலவே காமெடி செய்து பிரபலமானர். பார்ப்பதற்கும் வடிவேல் போலவே ஒரு சாயல் இருப்பதால், இவருக்கு வடிவேல் பாலாஜி என்று பெயர் வந்தது.

இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரின் மரணத்துக்கு சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே வடிவேல் பாலாஜி சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

கடந்த 15 நாட்களுக்கு முன் வடிவேல் பாலாஜிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு கை,கால்கள் செயல் இழந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள பில்ராத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு 15 நாட்களுக்கு வடிவேல் பாலாஜி சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு மருத்துவ செலவு செய்ய போதிய பணம் இல்லாத காரணத்தினால், அங்கிருந்து வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

விஜயா மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு பணம் கட்ட முடியாததால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கே கொரோனா நோயாளிகள் அதிகம் இருப்பதால் இன்று காலையில் அவர் அவசரமாக ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் திடீரென்று மரணம் அடைந்துள்ளார்.

கடைசி நேரத்தில் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் பல மருத்துவமனைகளில் அங்கும் இங்கும் மாற்றப்பட்டு இறுதியில் அரசு மருத்துவமனையில் வடிவேல் பாலாஜி உயிர்யிழந்திருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் ஆன வடிவேல் பாலாஜிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks