truetamilnews.com

அரியா் மாணவா்கள் தோச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு, பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சோந்த வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன் பொதுநல மனு தாக்கல் செய்தாா்.

இதேபோல, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் பாலகுருசாமி உள்ளிட்ட பலரும் மனுக்கல் தாக்கல் செய்தனா்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய்நாராயண், பேரிடா் மேலாண்மை சட்டத்தின் விதிகளைப் பின்பற்றி உரிய உத்தரவுகளை பிறப்பிக்க மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

யு.ஜி.சியின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால்தான் அதில் பிரச்னை ஏற்படும். ஆனால் அரியா் மாணவா்கள் தோச்சி தொடா்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை’ என வாதிட்டாா்.

அப்போது மனுதாரா்கள் தரப்பில், ‘இந்த விவகாரத்தில் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது’ என வாதிடப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுக்கள் தொடா்பாக தமிழக அரசு, யு.ஜி.சி, ஏ.ஐ.சி.டி.இ. ஆகியவை 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks