truetamilnews.com

இந்தியாவில் குறைந்த காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றது பப்ஜி கேம். குறிப்பாக இளைஞர்கள் இதற்கு அடிமையாகினர் என்றே கூறலாம். அவர்களுக்கு ஏற்ற வேகம், கிராபிக்ஸ், புதிய புதிய அப்டேட்கள் உள்ளிட்டவை அதில் வண்ணங்களில் இடம்பெற்றிருந்தன. 

ஆனால் பப்ஜி கேம் காரணமாக பல அசம்பாவித சம்பவங்கள் நடந்ததுள்ளன. இதனால் பெற்றோர்கள் அக்கேம் செயலியை தடைவிதிக்க கோரிக்கை விடுத்து வந்தனர். 

இதற்கிடையே லடாக் எல்லையில் இந்தியா – சீனா இடையேயான மோதலை அடுத்து அடுத்தடுத்து பல்வேறு வகையான செயலிகளை மத்திய அரசு முடக்கி வருகிறது. அந்த வகையில் அண்மையில் பப்ஜி உள்ளிட்ட 118 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த பப்ஜி கேம் மீது கொண்ட மோகத்தால் தாத்தாவிடம் இருந்து 15 வயது பேரன் ஒருவன் சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் திருடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


வடக்கு டெல்லியைச் சேர்ந்த 65 வயது முதியவர் தனக்கு வரும் பென்ஷன் தொகையை தனது வங்கியில் சேமித்து வந்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய கணக்கில் ரூ.275 மட்டுமே மீதம் இருப்பதாக  மெசேஜ் வந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பப்ஜி விளையாட்டில் சிறப்பு பாஸ் பெற்று அடுத்தடுத்த நிலைக்கு செல்லலாம் என்பதற்காக இந்த பணத்தை திருடியதும் அம்பலமானது.


பப்ஜிக்காக கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.2.34 லட்சத்தை அவன் பரிமாற்றம் செய்துள்ளான் என தெரிவித்துள்ளனர். பணத்தை எடுத்தது சொந்த பேரன் என்பதால் பெரியவர் வழக்கு ஏதும் பதியவில்லை. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks