truetamilnews.com

பொள்ளாச்சி:  பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்கள் வழியாக செல்லும் ரோட்டோரங்களில் ஆங்காங்கே கோழிக்கழிவு, ரப்பர்கழிவு உள்ளிட்ட பொருட்கள் கொட்டப்படுவது அதிகரித்துள்ளது. இதில் உடுமலை ரோடு சின்னாம்பாளையம் அருகே மற்றும் தொழில்பேட்டை, பாலக்காடு ரோட்டிலிருந்து ஜமீன்ஊத்துக்குளி செல்லும் வழியில் உள்ள ரோட்டோரத்தில் அண்மை காலமாக காலாவதியான மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவது அதிகமாக உள்ளது.  அதில் மருந்து கழிவுகள் மட்டுமின்றி, இறைச்சிக்கழிவுகளும் குவியலாக போடப்பட்டுள்ளது. இந்த கழிவு பொருட்கள் சுற்று வட்டார பகுதியிலிருந்து கொண்டுவரப்படுகிறதா? அல்லது கேரள பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது. இப்படி திறந்த வெளியில் மருத்துவக்கழிவு உள்ளிட்ட கழிவுகளை கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு விளைவிப்பதுடன், நோய் பரவும் அபாயம் நேரிடும் என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அதிலும், உடுமலை ரோடு தொழில்பேட்டை ரோட்டோரம் கழிவு பொருட்கள் குவியலாக இருப்பதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். எனவே, கழிவுகள் கொட்டப்படுவதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks