truetamilnews.com

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக வருகிற 9ம் தேதி திமுக பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது. மாவட்ட வாரியாக கூட்டம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக பொதுக்குழுக் கூட்டம் வருகிற 9ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. மாவட்ட வாரியாக திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ள இடங்கள் அறிவிக்கப்படுகிறது. 

சென்னை வடக்கு மாவட்டம்- அறிவகம், 150/490, சூரிய நாராயணன் தெரு, ராயபுரம், சென்னை கிழக்கு-லட்சுமி மகால், பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, புரசைவாக்கம்.சென்னை மேற்கு-கலைஞர் அரங்கம், அண்ணா அறிவாலயம். சென்னை தெற்கு-ஸ்ரீசாய் கிருஷ்ணா ஏ/சி ஹால், 76, கிழக்கு ஜோன்ஸ் ரோடு, சைதாப்பேட்டை. திருவள்ளூர் வடக்கு-சாய் நிவாஸ் திருமண மண்டபம், (மாவட்டச் செயலாளர் அலுவலகம் அருகில்), கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி. திருவள்ளூர் தெற்கு-ஜெயகிரிஸ் திருமண மகால் ஏ/சி, 59/45, தெற்கு பஜார் வீதி (மேம்பாலம் அருகில்), தண்டூரை, பட்டாபிராம். காஞ்சிபுரம் வடக்கு- என்.பி.ஆர்.திருமண மண்டபம், 1, ஜி.எஸ்.டி. சாலை, என்.பி.ஆர்.நகர், கூடுவாஞ்சேரி. காஞ்சிபுரம் தெற்கு-கலைஞர் பவள விழா மாளிகை, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. 

இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் சரியாக காலை 9 மணிக்குள் கூட்ட அரங்கினுள் சென்று அமர்ந்திடும் வகையில் செல்ல வேண்டும்.இக்கூட்டத்திற்கு என அழைப்பு பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

பொதுக்குழு உறுப்பினர்கள், கூட்ட அரங்கினுள் நுழைவதற்கு முன்பு, தலைமைக் கழகத்தால் அனுப்பப்பட்ட வருகை பதிவேட்டில் (மினிட்டில்) தவறாமல் கையொப்பமிட வேண்டும். கூட்ட அரங்கினுள் கைபேசி (செல்) அனுமதிக்கப்பட மாட்டாது என்பதால், யாரும் செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது. அத்துடன் இப்பொதுக்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றிட மாவட்ட கழகத்துடன் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதே போல திமுக மாவட்டம் ரீதியாக உள்ள இடங்களில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 9ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்…..மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் நடைபெறும் என்று அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks