truetamilnews.com

நீங்கள் ஆட்டுக்கறி வாங்க கடைக்கு செல்லும்போது தொடை, சந்துக் கறிகளை கேட்டு வாங்குவீர்கள்.  
ஏனெனில் அங்கு தான் சதை அதிகமாக இருக்கும்.  ஆனாலும் அந்த பகுதி உண்பதற்கு சிறிது கடினமாக இருக்கும்

பொதுவாக நடமாடும்போது அசையும் சதைகள் அதிகமாக இருக்கும். அந்த அசையும் சதைகள் கடினமாக இருக்கும். 

மாறாக நெஞ்சுப் பகுதி மற்றும் முதுகுப் பகுதி சதைகள் மென்மையாக  இருக்கும்.
இதனை அறிந்து நீங்கள் வாங்கினால் சிறப்பாக இருக்கும். 

மேலும் நாம் வாங்கும் இறைச்சி நல்ல தரமானதாக இருக்குமா என்பதற்கு இறைச்சியில் தேங்கி இருக்கும் இரத்தத்தின் அளவே அளவுகோல் ஆகும்

நல்ல உடல் நலத்துடன் உள்ள ஆடு வெட்டப்படுவதால் அதன் இரத்தம் இறைச்சியில் தேங்கி இருக்காது. 

ஆனால் நோய் இருக்கும் ஆடுகளின் இறைச்சியில் சிறிது இரத்தம் தேங்கி இருக்கும். ஆடு இறந்து போன பின்பு அறுத்து தொங்கவிடப்பட்டு இருந்தால் இறைச்சியில்  இரத்தம் படர்ந்திருக்கும். 

ஒரே வயதான ஆண் மற்றும் பெண் ஆடுகளில் பெட்டை ஆட்டு இறைச்சியே நன்றாக இருக்கும் 

வெள்ளாட்டு இறைச்சியில் உள்ள சத்துக்கள் 

ஈரப்பதம் —– 74.2%

புரதம்      —– 21.4%

கொழுப்பு —-3.6%

தாது உப்பு —-1.1%


மாமிசத்திற்கும் சில மருத்துவ குணங்கள் உண்டு
ஆட்டு மாமிசத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சிறப்பான மருத்துவ குணம் உண்டு.  பல பகுதிகள் வாயுவை ஏற்படுத்தவும், அஜீரணத்தை விளைவிக்கும் என்பதால் மிளகு மற்றும்  சீரகம் போன்ற பொருட்களை இட்டு சமைக்க வேண்டும். 

ஆட்டின் தலை இறைச்சி
இது இதயம் சம்பந்தமான நோயை நீக்கும்.   குடலுக்கு பலத்தை கொடுக்கும். கபால நோய்களை போக்கும்

கழுத்து இறைச்சி 
மிகவும் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.  குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மெல்லுவதற்கு ஏற்றவாறு இருக்கும்.  இதில் முக்கியமான ஒன்று கொழுப்பு இருக்காது. 

ஆட்டின் கண்
கண்களுக்கு மிகவும் நல்லது.  கண்களுக்கு பலத்தை கொடுக்கும். கண் பார்வை துலங்கும். 

ஆட்டின் இதயம்
தைரியம் அதிகரிக்கச் செய்யும். மன ஆற்றலை பெருக்கும்.  இதயம் நன்றாக பலம் பெறும். 

ஆட்டின் மார்பு இறைச்சி 
கபத்தை நீக்கும் தன்மை கொண்டது இந்த மார்புப் பகுதியின் இறைச்சி. நம் மார்பு பகுதிக்கு பலத்தை கொடுக்கும்.  மார்பில் புண் இருந்தால் ஆற்றி விடும். 

ஆட்டின் நாக்கு
உடல் சூட்டை குறைக்கும்.  நம் தோலுக்கு பசுமை தந்து பளபளப்பாக்கும்.


ஆட்டுக் கொழுப்பு
நமது இடுப்பு பாகத்திற்கு நல்ல பலம் தரும்.  எந்த விதமான இரணத்தையும் ஆற்றும்.  அம்மை மற்றும் அக்கி நோய்களுக்கு சிறந்த நிவாரணியாகும். 

ஆட்டின் மூளை
கண் குளிர்ச்சி பெறும். தாது விருத்தி உண்டாகும். புத்தி தெளிவடையும்.  நினைவாற்றல் பெருகும். மூளை பகுதிக்கு நல்ல பலத்தை தரும்

ஆட்டின் நுரையீரல் 
உடலின் வெப்பத்தை ஆற்றி குளிர்ச்சியை உண்டாக்கும்.  நுரையீரலுக்கு மிகுந்த வலுவைத் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks