truetamilnews.com

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவிருக்கும் ட்ரீம் 11 இந்தியன் பிரீமியர் லீக் 2020 தொடருக்கான அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இந்த சீசன் செப்டம்பர் 19 ஆம் தேதி அபுதாபியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே தொடங்குகிறது. 

சனிக்கிழமை சென்னை-மும்பை அணிக்கு இடையேயா போட்டிக்கு பிறகு, துபாய் தனது முதல் ஆட்டத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்துகிறது. இந்தப் போட்டியில் டெல்லி, பஞ்சாப் அணிகள் மோதுகிறது.

அதைதொடர்ந்து, திங்களன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக் இடையே மூன்றாவது போட்டி நடக்கிறது.

செப்டம்பர் 22, செவ்வாய்க்கிழமை அனறு ஷார்ஜாவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. 


மதியம் நடக்கும் போட்டிகள் இந்திய நேரப்படி மதியம் 3:30 மணிக்கும் மாலை நடக்கும் போட்டிகள் இரவு 7:30 மணிக்கும் தொடங்கும்.

துபாயில் 24 போட்டிகளும், அபுதாபியில் 20 போட்டிகளும், ஷார்ஜாவில் 12 போட்டிகளும் நடைபெறும்.
பிளேஆஃப் மற்றும் இறுதிப் போட்டிக்கான இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks