truetamilnews.com

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கோவில் தேர் ஒன்று நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


கோதாவரி மாவட்டம் அந்தர்வேதியில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் தேர் ஒன்று கூடாரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று  நள்ளிரவு திடீரென அந்த தேர் தீப்பிடித்து எரிந்தது. இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் தேர் முழுவதும் எரிந்துவிட்டனது. வரலாற்று சிறப்பு மிக்க அந்த தேர் எரிந்ததால் பக்தர்கள் கவலையில் உள்ளனர்.

அதிகாலை 3 மணிக்கு தீ அணைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் தேர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அச்சமடைந்துள்ள பக்தர்கள், ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடுமோ என்று பீதியடைந்துள்ளனர். அதனால் கோயிலில் பரிகார பூஜைகள் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks