truetamilnews

ராமநாதபுரம் அருகே 5 பைசாவுக்கு ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்ற அறிவிப்பினால், கடையின் முன் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் பிரியாணி கடை திறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க கடையின் உரிமையாளர் 5 பைசாவுக்கு ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படுவதாக அறிவிப்பு செய்தார். இதையடுத்து 5 பைசா நாணயத்துடன் ஏராளமானோர் பிரியாணி வாங்க திரண்டனர்.

யாரிடம் 5 பைசா இருக்கும் என நினைத்துக் கொண்ட மக்களுக்கு இவ்வளவு பேர் வந்தது ஆச்சரியத்தை அளித்தது என்று ராமநாதபுரத்தை சேர்ந்த மக்கள் கூறிச் சென்றனர்.

இதுகுறித்து பிரியாணி கடை உரிமையாளர் ப்ரத் கூறுகையில், புதிய பிரியாணி கடை மீது வாடிக்கையாளர்களின் கவனம் திரும்ப வேண்டும் என்பதற்காகவும், அதே சமயத்தில் செல்லாத நாணயத்தை கூட சேமித்து வைத்தால் பெருமையை தரும் என்பதை உணர்த்தும் வகையில் 5 பைசா நாணயத்தை கொண்டு வந்து கொடுத்தால் பிரியாணி தரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டோம் என்று கூறினார். எல்லார் கையிலும் 5 பைசாவை பார்க்கும்போது ஆச்சரியமாகவும் இருந்தது என்றும் கூறினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks