truetamilnews.com

கோவில்பட்டி: கோவில்பட்டி தொகுதியில் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் தோல்வி அடைந்துள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் கடம்பூர் ராஜு 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி வெற்றி பெற்றுள்ளார். தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 1,23,538 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஆலந்தூர்: ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்-காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் அவர்கள் 1,16,785 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் வளர்மதியை 40,571 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றார்.

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை குஷ்பு தோல்வி அடைந்துள்ளார். 33,044 வாக்குகள் வித்தியாசத்தில் எழிலனிடம் குஷ்பு தோல்வி அடைந்துள்ளார்.

காரைக்குடி: காரைக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா தோல்வி அடைந்துள்ளார். காரைக்குடி தொகுதியில் 21,485 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி வெற்றி பெற்றுள்ளார்.

அரூர்… அரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சம்பத் குமார் 29831 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளார். அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட சி.பி.ஐ.எம் வேட்பாளர் குமார், 29,831 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

சென்னை: ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் ஜெயக்குமார் தோல்வி அடைந்துள்ளார். திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளர் மான்ராஜ், இறந்த காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவைக் காட்டிலும் 12,738 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒரே வேட்பாளர் இவர் மட்டும்தான்.

கன்னியாகுமரி : காலை முதலே கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை வகித்து வந்தார். தற்போது குமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணனை விட ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 762 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வசந்த் வெற்றி வாகை சூடியுள்ளார்.

ராசிபுரம்: ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் சரோஜா தோல்வி அடைந்துள்ளார். 1,820 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மதிவேந்தன் வெற்றி பெற்றுள்ளார்.

நாமக்கல் :நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் அதிமுக வேட்பாளர் கே.ஏ செங்கோட்டையன் 28,477 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளார். அவரை எதிர்த்து திமுக சார்பில் மணிமாறன் போட்டியிட்ட நிலையில், கே.ஏ செங்கோட்டையன் 28,477 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார்.

நாகை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நகை தொகுதி விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் வெற்றி பெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தங்க கதிரவனை விட 7,328 வாக்குகள் கூடுதலாக பெற்று ஆளூர் ஷாநவாஸ் வெற்றியாடைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks