truetamilnews.com

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. சுமார் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதனால் திமுக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இதைதொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் சூரி முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, 40 வருட கடின உழைப்பிற்கும் ,பொறுமைக்கும் பலனாக 6 வது முறை தி.மு.க சார்பில் தமிழக முதல்வராக பதவி ஏற்கும் கழக தலைவர் முக ஸ்டாலின்அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

40 வருட கடின உழைப்பிற்கும் ,பொறுமைக்கும் பலனாக 6 வது முறை தி.மு.க சார்பில் தமிழக முதல்வராக பதவி ஏற்கும் கழக தலைவர் @mkstalin அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐🙏pic.twitter.com/PuctFNaPSq
— Actor Soori (@sooriofficial) May 2, 2021
ஜெயம் ரவி முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, எங்கள் புதிய முதல்வருக்கு வாழ்த்துக்கள். இந்த கடினமான காலங்களில் உங்கள் நிர்வாகத்தை மிகுந்த எதிர்பார்ப்புகளுடன், நம்பிக்கையுடனும் எதிர்பார்க்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகரும் உதயநிதி ஸ்டாலின் நண்பருமான விஷால், வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,அற்புதமான வெற்றியை எதிர்நோக்கும் திமுகவுக்கு வாழ்த்துக்கள் என் இனிய நண்பர்களான உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோருக்கும், வாழ்த்துக்கள்.நமது புதிய முதலமைச்சர் முகஸ்டாலினுக்கு நல்வரவு, அடுத்து வரும் ஆண்டுகளில் தமிழகம் நல்ல விஷயங்களோடு முன்னேறட்டும், அபாய நிலையில் இருக்கும் திரைத்துறைக்கு ஆக்ஸிஜன் கிடைக்கட்டும் என கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சித்தார்த் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பதாவது, “ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்.
வாழ்த்துக்கள் முக ஸ்டாலின்.எங்கள் அனைவரின் நலனுக்காக நீங்கள் சிறந்த ஆட்சியை கொண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன்.நாங்கள் அனைவரும் உங்களை எதிர்பார்ப்புகளோடும் கேள்விகளோடும் பார்க்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
After #Jayalalitha avl. a #ChiefMinister has been chosen by our people.
Congratulations to @mkstalin avl. on the resounding mandate. Hope you will bring great governance for the good of all of us. We are all looking at you with expectations and questions.
Vaazhga Tamizh.
— Siddharth (@Actor_Siddharth) May 2, 2021

இதே போன்று நடிகர் ரஜினியும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் கடும் போட்டியில், திறம்பட அயராது உழைத்து, வெற்றி அடைந்து இருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மதிப்பிற்குரிய மு.க. ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து, தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்ற பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன், இவ்வாறு ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது, “வாழ்த்துக்கள் முதல்வரே முக ஸ்டாலின். தமிழக மக்களுக்கு நிறைய புதிய திட்டம் கொண்டுவரணும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் தமிழக தேர்தலில்பெரும் வெற்றி பெற்றிருக்கும் ஸ்டாலின் மனமார்ந்த வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். தம் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கும் உதயநிதி சாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ் தனது பதிவில், முதல் முறையாக மக்கள் பணிசெய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நண்பர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எமது இதயபூர்வமான வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். தனுஷின் இந்த பதிவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், முக ஸ்டாலின் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும், மகத்தான வெற்றி வெற்ற சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும், சிறப்பாக ஆட்சி அமைக்க வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.

நகைச்சுவை நடிகர் சதிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் மகத்தான வெற்றி பெற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் திரு. ஸ்டாலின் அய்யா அவர்களுக்கும், திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks