truetamilnews.com

தமிழகத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்ற நிலையில் முக்கிய அமைச்சர்கள் சிலர் பின்னடைவில் இருந்தனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

அவ்வாறு பின்னடைவில் இருந்தவர்களில் ஒருவர் சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த சில மணி நேரங்களாக பின்னடைவில் இருந்த அமைச்சர் ஜெயக்குமார் சற்றுமுன் வெளியான தகவலின்படி தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது

திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி ராயபுரம் தொகுதியில் வெற்றி பெற்று உள்ளார். அவர் பெற்ற வாக்குகள் 49 ஆயிரத்து 543. இந்த தொகுதிகள் அமைச்சர் ஜெயக்குமார் பெற்ற வாக்குகள் 30 ஆயிரத்து 61 என்பதால் அவர் 19082 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks