truetamilnews.com

பாநாசம் தொகுதியில் 16,145 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பாபநாசம் தொகுதியில் திமுக வேட்பாளரான மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா 16,145 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே. கோபிநாதனுக்கும், திமுக வேட்பாளர் எம்.எச். ஜவாஹிருல்லாவுக்கும் தொடக்கம் முதல் கடும் போட்டி இருந்து வந்தது. தொடக்கத்திலிருந்து எட்டாவது சுற்று வரை கோபிநாதன் முன்னிலை பெற்று வந்தார்.இதனிடையே, கோபிநாதன் 4,000 வாக்குகளுக்கும் அதிகமாக முன்னிலை பெற்றார்.

இந்நிலையில், ஒன்பதாவது சுற்று முதல் திமுக வேட்பாளர் முன்னிலை பெறத் தொடங்கினார்.முதலில் 1,059 வாக்குகள் வித்தியாசத்துடன் முன்னிலை பெற்ற இவர் இறுதி வரை முன்னேறி வந்தார். இறுதியாக 26 ஆவது சுற்றில் 16,145 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதில், திமுக வேட்பாளர் 86,256 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 70,111 வாக்குகளும் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks