truetamilnews


ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியை அரைத்து அதனை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால் சருமம் ஜொலிக்கும்


வேப்பிலை

வேப்பிலையை அரைத்து அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து அதன் பிறகு முகத்தை கழுவினால் சருமத்தில் நச்சுக்கள் அனைத்தும் நீங்கி சருமம் ஆரோக்கியமாக இருக்கும் 


தக்காளி

தக்காளியில் லைகோபைன் எனும் சருமத்தை பாதுகாக்கும்   பொருள் உள்ளது.  எனவே தக்காளியை கொண்டு தினமும் மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள அனைத்து அழுக்குகளும் நீங்கும்


பால்

பால் சருமத்தை இறுக்கமாக வைத்துக் கொள்வதோடு சருமத்தில் வறட்சி இல்லாமல் பார்த்துக் கொள்ளும். அதற்கு பாலை பஞ்சில் நினைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால் முகம் பொலிவோடு இருக்கும். 


பப்பாளி


பப்பாளியை கொண்டு முகத்தில் ஃபேஸ் பேக் போட்டால் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்துளைகள் அடைக்கப்பட்டு பருக்கள் வராமல் தடுக்கும். அதற்கு பப்பாளியை அறைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து 5 – 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்


தேன்

அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற ஒரே அழகு பராமரிப்பு பொருள் தேன் தான்.  ஏனெனில் தேனை சருமத்திற்கு தேய்த்து மசாஜ் செய்து கழுவினால் சருமம் அழகாக மாறும்.  வேண்டுமெனில் தேனுடன் தயிர் மற்றும் சந்தனப் பொடியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks