truetamilnews


கட்டை விரல்

கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால் மன அழுத்தம் குறையும் மற்றும் மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடல் சக்தியை மேம்படுத்த உதவும்.  கட்டை விரல் மண்ணீரல் மற்றும் வயிற்றுப் பகுதியுடன் இணைப்புடையது. இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகின்றது. 

ஆள்காட்டி விரல்

பயம் மற்றும் பலவீனத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல் ஆகும். மேலும் ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் உள்ள அடிமைத்தனத்தை குறைக்கவல்லது. ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் தொடர்புடையது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருப்பதற்கும் நீர் வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது. 

நடு விரல் 

நடு விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால் கோபம் குறையும்.  தலைப்பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் வைத்திருக்கும். நடுவிரலானது கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகின்றது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.

 மோதிர விரல் 

ஏறத்தாழ கட்டை விரலுடன் ஒத்துப் போகும் இந்த மோதிர விரல். மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணங்கள் குறையும். மோதிர விரல் நுரையீரலுடன் தொடர்புடையது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும் நரம்பு மண்டலம் தசைகள் ஆகியவற்றிற்கு வலிமை அளிக்கிறது. 

சிறுவிரல் 

சிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால் இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயல் திறனை மேம்படுத்துகின்றது. இதனால் நம் எண்ணம், சிந்தனை, கவனம் ஆகியவை மேம்படும்

உள்ளங்கை 

மன அழுத்தம் என்பது எல்லாருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டு மொத்த மனதையும் எண்ணத்தையும் உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.  இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்விலிருந்து விரைவில் விடுபட உதவுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks