truetamilnews

 
தினமும் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் யாருக்கும் தெரிவதில்லை 

காலையில் எழுந்தவுடன் வெந்நீர் அருந்தினால் உடல் ஆரோக்கியம் பெறும். 

அதே போல் மாதவிடாய் ஏற்படும் காலங்களில் பெண்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். 

அந்த நேரத்தில் வெந்நீரை அடிக்கடி அருந்தினால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி வெகுவாக குறையும். 

எப்போதும் காலையில் மலம் வருவதில் சிரமம் ஏற்பட்டால் ஒரு டம்ளர் வெந்நீர் அருந்தினால் அந்த பிரச்சினை தீரும். 

தினமும் சாப்பிடுவதற்கு அரை மணிநேரம் முன் ஒரு டம்ளர் வெந்நீர் அருந்தினால் உடல் எடை குறையும்
அடிக்கடி தாகம் ஏற்படும் போது பச்சைத் தண்ணீர் குடிக்காமல் பொறுக்கும் அளவுக்கு வெந்நீர் அருந்தினால் உடலில் உள்ள கழிவுகளை நீங்கிவிடும். 

திருமண விருந்து சாப்பிட்டவுடன் வெந்நீர் அருந்தினால் விரைவில் ஜீரணமாகிவிடும்

அடிக்கடி வெந்நீர் அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது
அதே போல் வெந்நீர் இரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது. 

வயிற்று புண்களினால் ஏற்படும் வலியை குறைக்க பனமிதமான சூடான வெந்நீரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் வலி தீரும்

வெந்நீர் குடித்தவுடன் நம் உடலின் வெப்பநிலை உயர்கிறது. அது உடனடியாக வியர்வையாக மாறி வெளியேறுகிறது. இதனால் உடலில் உள்ள நச்சுத்தன்மைகள் வெளியேற்றப்பட்டு உடல் சுத்தமாகிறது. 

வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக் கொண்டால் இன்னும் பலன் கிடைக்கும் 

அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன் முடிகளின் வேர்கள் சுறுசுறுப்புடனும் இருக்கும் மேலும் புது முடிகள் வளர இது உதவும். 

இந்த காலத்தில் நிறைய பேருக்கு வேகமாகவே வயதாகிவிடும். அதற்கு உடலில் உள்ள நச்சுத்தன்மைகள் தான் காரணம் ஆகும். வெந்நீர் குடிப்பதால் அத்தகைய நச்சுப் பொருள்கள் விரைவில் வெளியேறிவிடும். இதனால் வேகமாக வயதாவது குறையும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Enable Notifications    OK No thanks